ஓரின பாலியல் காணொளி: அமெரிக்க நிபுணரின் உதவியை நாடும் மலேசியா

ஓரின பாலியல் காணொளி: அமெரிக்க நிபுணரின் உதவியை நாடும் மலேசியா

1 mins read
b6fa2774-7aea-4c09-99fb-0cccf6b4e42b
மலேசிய பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலியும் முன்னாள் சண்டுபோங் பிகேஆர் இளையர் தலைவர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸும் (படம்) காணொளியில் இடம்பெற்றதாக முன்பு செய்தி வெளியானது. படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசிய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரின பாலியல் காணொளியின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், மலேசிய போலிஸ் ஓர் அமெரிக்க நிபுணரின் உதவியை நாடியுள்ளது.

காணொளிகளைப் பற்றி மூன்றாம் தரப்பினரின் கருத்தை அறிந்திட போலிசார் ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்தனர்.

அதன் தொடர்பான அறிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் வந்து சேர்ந்துவிடும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மலேசிய பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலியும் முன்னாள் சண்டுபோங் பிகேஆர் இளையர் தலைவர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸும் காணொளியில் இடம்பெற்றதாக முன்பு செய்தி வெளியானது. அது மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

குற்றச்சாட்டுகளை அமைச்சர் அஸ்மின் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அந்தக் காணொளி தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity