கோலாலம்பூர்: கெஅடிலான் கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்துள்ள நிலையில் அக்கட்சியின் இளைஞர் அணி துணைத் தலைவர் முகம்மது ஹில்மான், அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ள பிகேஆர் இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலிதான் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் அதுதான் வழக்கம் என்றும் ஹில்மான் வலியுறுத்தியுள்ளார். இளைஞர் அணி மாநாட்டை துணைப் பிரதமர் வான் அசிசா அதிகாரபூர்வமாக தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.
அஸ்மின் அலிக்கு ஆதரவாகப் பேசிய இளைஞர் அணி துணைத் தலைவர்
1 mins read
-

