ஷார்ஜாவில் இந்திய ஊழியர்கள் நால்வர் கைது; தகராறில் மதுப்புட்டியால் தாக்குதல்

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஷார்ஜா போலிசார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் மதுப் புட்டியை எடுத்து மற்றொருவரின் தலையில் அடித்ததாகக் கூறப்பட்டது.

தாக்குதலில் காயமுற்ற, ஏ.என் என்று அறியப்படும் அந்த 27 வயது ஆடவரின் தலையில் ரத்தம் வழிந்தது. அல் காசிமி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity