பெட்டாலிங் ஜெயா: பிரதமர் பதவியை டாக்டர் மகாதீர் முகம்மது கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பது குறித்து விவாதம் நடத்தலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதின் ஒரு யோசனையை முன்வைத்ததாக வெளிவந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
அவர் ஒரு கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளர் ரோஷ்மா ஹம்சாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஸ்டார் தகவல்கள் முன்னதாக தெரிவித்தன.
நவம்பர் 20ஆம் தேதி தான் ஒரு கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி யுள்ளதாகக் கூறப்படும் தகவலை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுத்துள்ளார்.
தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலர் இத்தகவலை பரப்பி இருப்பதாகவும் தான் வெளிநாடு சென்றிருந்ததால் அத்தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரி விக்கவில்லை என்றும் கைரி கூறினார். இதற்கிடையே நாடாளுமன்ற சபாநாயகர் அரிஃப் முகம்மது யூசோப் முன்னதாக வெளிவந்த தகவலை மறுக்கவோ அல்லது உறுதிப்பபடுத்தவோ இல்லை. தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுதினிடமே அதுபற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அரிஃப் முகம்மது யூசோப் கூறினார்.
பதவி மாற்றம் குறித்து நடக்கும் விவாதத்தில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கைரி கூறினார்.

