அன்வார்: கெஅடிலான் கட்சி வலுவாக இருக்கிறது

அன்வார்: கெஅடிலான் கட்சி வலுவாக இருக்கிறது

1 mins read

கோலாலம்பூர்: பிகேஆர்(கெஅடிலான்) கட்சி வலுவாக உள்ளது என்றும் 90 விழுக்காட்டினர் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். சரவாக் பிகேஆர் மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். எந்த ஒரு கட்சியும் தொண்டர்களின் 100 விழுக்காடு ஆதரவைப் பெறுவது மிகவும் சிரமம் என்று கூறிய அன்வார், அதற்காகப் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கெஅடிலான் கட்சிக்கு ஆதரவு கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் பதவி மாற்றம் குறித்து கெஅடிலான் கட்சிக்குள் உட்பூசல் நிலவுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிகார மாற்றம் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெற தாமும் பிரதமர் மகாதீரும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.