கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று அவரின் மனைவியுடன் கோலாலம்பூரில் பல இடங்களுக்கு நகர்வலம் வந்தார்.
94 வயது டாக்டர் மகாதீர், மனைவியுடன் அவரது புரோட்டான் காரை ஒட்டிச் செல்வதைக் காட்டும் காணொளியும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றன.
“மனைவி ஹஸ்மாவை நான் அவ்வப்போது அன்புடன் வெளியில் அழைத்துச் செல்வதுண்டு,” என்று தனது இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாலான் புக்கிட் பின்டாங்கில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் அந்தத் தம்பதியர் சிறிது நேரத்தைச் செலவிட்டனர்.
திரு மகாதீரின் அந்தப் பதிவு வலைத்தளங்களில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தத் தம்பதியர் அன்பைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் அவர்களது இந்தப் பயணம் பற்றியும் வலைத்தளவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிந்துள்ளனர்.