ஹாங்காங்கின் உள்ளூர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடித்து வந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஹாங்காங் மக்கள் இதுவரை இல்லாத அளவில் வாக்குச்சாவடிகளில் நேற்று திரண்டு வாக்களித்தனர்.
ஹாங்காங்கின் 452 மாவட்ட மன்றத்தில் ஜனநாயக வேட்பாளர்கள் பாதிக்கும் அதிகமான இடங்களை வென்று, சீனாவின் மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவான வேட்பாளர்களைத் தோற்கடித்தனர்.
இன்று காலை 8 மணிக்குள்ளாகவே ஜனநாயக வேட்பாளர்கள் 452 இடங்களில் 333ஐக் கைப்பற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை, ஜனநாயகக் கட்சியினர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெற்ற 100 வாக்குகளைவிட மூன்று மடங்கிற்கு மேலாக உள்ளது.
ஹாங்காங்கின் மாவட்ட மன்றம் அந்நகரின் செலவினத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துவற்கான அதிகாரம் உள்ளது.