மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலுள்ள பாசிர் கூடாங் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் கார், ஜாலான் பெக்கெலிலிங் நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளானதில் தீப்பிழம்பாக வெடித்தது.
வெடித்த அந்தக் காரில் கருகி மாண்டவர் 39 வயது ரொஹைசல் ரஹ்மாத் என்று த ஸ்டார் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.40 மணிக்கு செரி அலாமிலிருந்து கம்போங் பாசிர் பத்தேக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் போலிசார் தெரிவித்தனர். மாண்டவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மைல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.