கடத்தப்பட்ட தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்

கடத்தப்பட்ட தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்

1 mins read
2704e995-bc9c-4344-bfd3-6baa73fb2a58
காப்பாற்றப்பட்ட பிரிட்டிஷ்காரர் எலன் ஆர்தர் ஹைரன்ஸ் (இடது), அவரது மனைவி வில்மா பக்லினாவான் ஹைரன்சுடன் பிலிப்பீன்ஸ் ராணுவ உயர் அதிகாரி. படம்: இபிஏ -

மணிலா: ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்பிலிப்பீன்சில் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட தம்பதியரை பிலிப்பீன்ஸ் சிறப்புப் படை நேற்று காப்பாற்றியது. சிறப்புப் படைக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே ஜோலோ தீவில் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட பிரிட்டிஷ்காரர் எலன் ஆர்தர் ஹைரன்சையும் அவரது மனைவி வில்மா பக்லினாவானையும் அங்கேயே விட்டுவிட்டு கடத்தல் காரர்கள் தப்பினர். கடத்தல்காரர்கள் அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.