அன்வார் இப்ராஹிமுக்குப் பேரிடி, பின்னடைவு

கோலாலம்பூர்: மலாக்கா செனட் சபை பிரதிநிதியாக கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்த வேட்பாளர் நியமிக்கப்படவில்லை. இது அன்வாருக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பானின் ஒரு பகுதியான அமானா கட்சியைச் சேர்ந்த திரு அட்லி ஸஹாரி மலாக்கா மாநிலத்தின் முதல்வராக இருந்து வருகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அண்மையில் மலாக்கா சட்டமன்றத்தின் நிர்வாக கவுன்சிலரான சாமிநாதன் கணேசன் மலேசியாவின் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளைவிட வெறும் இரண்டு தொகுதிகள் கூடுதலாக வைத்துக்கொண்டு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மலாக்காவில் ஆட்சி புரிகிறது.

இந்நிலையில், மலாக்காவின் இரண்டு செனட்டர்களில் ஒருவராக கெஅடிலான் கட்சியின் மலாக்கா மாநிலத் தலைவர் ஹல்மி பச்சிக்கை நியமிக்க அன்வார் விரும்பினார். இதுதொடர்பாக மலாக்கா சட்டமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் சொந்த கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வராததை அடுத்து, அன்வாரின் விருப்பம் நிறைவேறாமல் போனது.

வாக்கெடுப்பில் திரு பச்சிக் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இந்தத் தோல்வி அன்வாரைச் சேரும் என்று பரவலாகக் கூறப்படுகிறது.28 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் 13 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் திரு பச்சிக்கிற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் அன்வாருக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவுக்கு கெஅடிலானில் நிலவி வரும் கட்சி உட்பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. அன்வாருக்கும் கட்சித் துணைத் தலைவரும் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சருமான அஸ்மின் அலிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.

கட்சித் தலைவர் அன்வார் எடுத்த முடிவு கைகூடாமல் போனதற்கு மலாக்கா முதல்வர் திரு அட்லி ஏமாற்றம் தெரிவித்தார்.இந்தத் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய கட்சியின் தலைமைத்துவம் ஒன்றுகூடி ஆய்வு நடத்தும் என்று அவர் கூறினார்.

மேலும் முக்கிய வாக்களிப்புக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வராததற்கான காரணம் கண்டறியப்படும் என்றார் அவர்.

“இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கட்சிக்குள்ளேயே சதிவேலை நடந்திருக்கும் என்று நம்பவில்லை,” என்று திரு அட்லி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!