வாஷிங்டன்: அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தாமும் போட்டியிடப் போவதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான மைக்கல் புளூம்பெர்க் அறிவித்தார்.
பெரும் கோடீஸ்வரர், நன்கொடையாளர், பிரபலமானவர், தேர்தலில் போட்டியிட அளவில்லா நிதி வசதி உடையவர், நடுத்தர கொள்கைகளைக் கொண்ட அரசியல்வாதி எனப் பல சிறப்புகளை இவர் பெற்றிருந்தாலும் ஜனநாயகக் கட்சி தேர்தல் களத்தில் உள்ளவர்களை இவராால் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேட்பாளராகத் தேர்வு பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் இவர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிர்ம்ப்பை தேர்தலில் வெல்லக்
கூடியவர் என்று செய்தி வந்ததை வைத்துப் பார்க்கும்பொழுது அமெரிக்கப் பொதுமக்கள் இவரைத் தங்கள் தலைவர் என வேண்டுமானால் ஏற்கத் தயாராக இருக்கலாம்.
ஆனால், அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்கள் முதலில் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரை தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும்.
இதில் இவரது கடந்தகால
அரசியல் வாழ்க்கை இடையூறாக இருக்குமோ என எண்ணத் ேதான்றுவதாக கூறப்படுகிறது.
இவர் முன்னர் ஜனநாயகக் கட்சி உறுப்பினராக இருந்தார். பின்னர், 2001ஆம் ஆண்டு குடியரசுக் கட்சிக்கு மாறி நியூயார்க் நகர மேயராக தேர்வு பெற்றார்.
2007ஆம் ஆண்டுவரை குடியரசுக் கட்சி உறுப்பினராக இருந்துவிட்டு பின்னர் சுயேச்சையாக மாறி சென்ற ஆண்டு மீண்டும் ஜனநாயகக் கட்சிக்குத் திரும்பினார்.
இவர் இவ்வாறு அடிக்கடி கட்சி மாறுவது இவர் கொண்டிருக்கும் கொள்கைகள் மீது ஐயத்தைக் கிளப்பியுள்ளது.
புளூம்பெர்க்கின் அதிபர் தேர்தல் முயற்சி சாத்தியமாவது கடினம் என்று கூறும் ஃபோர்ட்ஹம் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளரான மோனிகா மெக்டர்மட், “அவர் அடிப்படையில் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர், எனவே ஜோ பைடனை கைகழுவிவிட்டு இவரை வேட்பாளராக எத்தனை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வர் என்பது எனக்குத் தெரியாது,” என்ற தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திரு புளூம்ெபர்க் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் சென்ற வாரம் ஏழாவது நிலையில் இருந்தததாகக் கூறும் செய்தித் தகவல் ஒன்று, ஜனநாயகக் கட்சியில் இவருக்கான ஆதரவு தற்போது 3% மட்டுமே என்று கூறுவது இங்கு நினைவுகூரத்தக்கது.