ஆயுதம் தாங்கிய 8 பேர் விமானத்தைக் கடத்தி கொள்ளை

ஆயுதம் தாங்கிய 8 பேர் விமானத்தைக் கடத்தி கொள்ளை

1 mins read
a17c6a60-8945-4d0c-a7c4-7b0a385a02cd
படம்: ஊடகம் -

நியூ பிரிட்டன் தீவின் காஸ்மடாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த தங்களது விமானம் ஒன்றை ஆயுதம் தாங்கிய எண்மர் இன்று (நவம்பர் 26) கடத்திச் சென்றதாக பாப்புவா நியூ கினியின் 'டிராபிக்ஏர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானியை மிரட்டி அதனை வலுக்கட்டாயமாக ஓரிடத்துக்கு கொண்டு சென்றதும், அந்த விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட 'கார்கோ', பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, விமானத்தைக் கடத்திய எட்டுப்பேரும் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விமானி காயம் ஏதுமின்றி விமானத்துடன் போர்ட் மோர்ஸ்பைக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

விமானமும் பாதிக்கப்படவில்லை என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity