‘மக்களின் அதிருப்திக்காக சட்டத்தை தளர்த்தமுடியாது’

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்து முடிந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலின் முடிவை வைத்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் மீது மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

இருப்பினும் அதற்காக சட்டத்தின் பிடியைத் தளர்த்துவது என்பது சரியானதாக இருக்காது என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் சீனாவுக்கு ஆதரவான அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஜனநாயக இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றாலும் அரசாங்கம் தனது கொள்கையின் பிடியை ஒருபோதும் தளர்த்தப்போவதில்லை என்று திருவாட்டி லாம் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்களால் ஹாங்காங்கில் நிலையற்ற தன்மை நிலவிவருகிறது.

இழுபறியாக இருந்து வரும் பிரச்சினைகளுக்கு ஹாங்காங் அரசு விரைந்து தீர்வுகாணத் தவறிவிட்டதும் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்று திருவாட்டி லாம் கூறினார்.

இந்தத் தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டு அரசாங்க நிர்வாகத்தை மேம்படுத்துவதே எனது தலையாயப் பணி என்று கேரி லாம் சூளுரைத்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் ஹாங்காங்கில் சீனாவின் பிடி தளர்த்தப்பட வேண்டும் என விரும்பும் வேட்பாளர்களில் 452 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதனையடுத்து ஹாங்காங்கில் அரசியல் சீர்திருத்தம் கோரி போராட்டம் வலுக்கிறது. சீனாவுக்கும் ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி லாமுக்கும் சினத்தை மூட்டும் வகையிலான இந்தக் கோரிக்கையை கேரி லாம் தள்ளுபடி செய்துவிட்டார்.

தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற ஜனநாயக ஆதரவாளர்கள் அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு போராட்டக்காரர்கள் மீதான போலிஸ்காரர்கள் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். ஜனநாயக ஆதரவாளர்களின் இந்தக் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்த திருவாட்டி லாம், அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

“நாம் செய்ய வேண்டியதெல்லாம் சமூகத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் உதவியால் மட்டுமே ஹாங்காங் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணமுடியும்,” என்று கூறியுள்ளார் திருவாட்டி லாம்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவருமான திரு லாம் சியூக் டிங், ஒரு செயலுக்குப் பின் எந்தவிதப் பிரதிபலிப்பும் எதிர்வினையும் இல்லாதிருந்தால் தீர்வும் இல்லாமலேயே போய்விடும்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து கூடி அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே சாலச்சிறந்தது என்று திருவாட்டி லாம் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக ஆதரவாளர்கள் வாக்காளர்களால் எழுச்சி பெற்றுள்ளனர். ஆனால், திருவாட்டி லாம், இன்னமும் கோமா நிலைக்குச் சென்றதுபோல் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்,” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திருவாட்டி லாம், “தேர்தலின்போது நிலவிய அமைதி, சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹாங்காங்கில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமிக்ஞையாக இருந்தது என தான் நம்புவதாகக் கூறினார். தொடர்ந்து ஹாங்காங் மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

“வன்முறையைக் கையில் எடுப்பது நமக்கு முன்னேற்றத்தைக் கொடுக்காது. எனவே ஹாங்காங்கில் அமைதி நிலவ அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்,” என்று அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், “திருவாட்டி லாம் மக்களுக்கு ஆற்றிய உரையில் புதிதாக ஒன்றுமில்லை. அது வழக்கமாக அவர் ஆற்றும் உரையே,” என்று ஹாங்காங் சீன பல்கலைக்கழகத்தின் அரசியல் நிபுணர் மா நோக் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக ஆதரவாளர்கள். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரையில் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி என்றும் திரு மா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!