மலாக்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் நடத்தையில் அன்வார் அதிருப்தி

மலாக்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் நடத்தையில் அன்வார் அதிருப்தி

1 mins read
47aaa72a-37da-40ec-8d0e-f675cde1ddd7
2019 நவம்பர் 23ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பிகேஆர் கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் (நடுவில்). படம்: இபிஏ -

கோலாலம்பூர்: மலாக்கா சட்டமன்றத்தில் மாநில அரசு கொண்டுவந்த ஒரு தீர்மானத்திற்கு இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தவறியது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என மலேசியாவின் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு வருகிறேன். அவர்களை நேரில் சந்திப்பேன் அல்லது அவர்களோடு தொலைபேசியில் பேசுவேன்.

"இவ்விரு சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனெனில், மாநில அரசின் முடிவுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளை அவர்கள் ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு," என்று திரு அன்வார் நேற்று கூறினார்.

மலாக்கா பிகேஆர் தலைவர் அப்துல் ஹலிம் பாசிக்கை செனட்டராக நியமிக்கும் தீர்மானம் சட்டமன்றத்தில் நேற்று முன்

தினம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக 12 வாக்குகளையும் அதற்கு எதிராக 13 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டது. வாக்களிப்பு நடத்தப்பட்டபோது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உறுப்பினர்கள் இருவர் அவையில் இல்லை.