காஸ்மடா: நியூ பிரிட்டன் தீவின் காஸ்மடாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த தனது விமானம் ஒன்றை ஆயுதம் தாங்கிய எண்மர் நேற்று கடத்திச் சென்றதாக பாப்புவா நியூ கினியின் ‘டிராபிக்ஏர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானியை மிரட்டி விமானத்தை வலுக்கட்டாயமாக ஓரிடத்துக்கு கொண்டு சென்றதும், அதில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள், பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, விமானத்தைக் கடத்திய எட்டுப்பேரும் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விமானி காயம் ஏதுமின்றி விமானத்துடன் போர்ட் மோர்ஸ்பிக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. விமானமும் பாதிக்கப்படவில்லை என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.