கோலாலம்பூர்: இணைய மோசடிக் கும்பல் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சீன நாட்டவர்கள் 104 பேரை மலேசிய அதிகாரிகள் சாபாவில் கைது செய்துள்ளனர்.
சாபாவில் மூன்று இடங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் 900 கைத்தொலைபேசிகளையும் மடிக்கணினிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இணைய மோசடிக் கும்பல் சீனாவிலிருந்து ஆட்களை சேர்த்து அவர்களை சாபாவுக்கு அனுப்பியதாக சாபா மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகம்மது அமின் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் 94 பேர் ஆண்கள் என்றும் 10 பேர் பெண்கள் என்றும் அவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இணைய மோசடிக் கும்பல் சாபாவில் கடந்த இரு மாதங்களாக செயல்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.