அல்பேனியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

அல்பேனியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

1 mins read
f980fff0-d3cd-43b4-a459-3c9e3fc6c838
அல்பேனியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. 650 பேர் காயம் அடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கிடையில் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளிலிருந்து 45 பேரை மீட்புக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். அல்பேனியாவை செவ்வாய்க்கிழமை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாகின. பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. படம்: ஏஎஃப்பி -

அல்பேனியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் 650 பேர் காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின்போது பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கிடையில் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்புக்குழுவினருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளிலிருந்து 45 பேரை மீட்புக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். அல்பேனியாவை செவ்வாய்க்கிழமை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாகின. பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. படம்: ஏஎஃப்பி