'கெஅடிலான் கட்சிக்குள் நிலவும் உட்பூசலை அதிகப்படுத்தாதீர்'

'கெஅடிலான் கட்சிக்குள் நிலவும் உட்பூசலை அதிகப்படுத்தாதீர்'

1 mins read

கோலாலம்பூர்: கெஅடிலான் கட்சி இளைஞர் அணி அக்கட்சிக்குள் நிலவும் உட்பூசலை அதிகப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் தேசிய இளைஞர் அணித் தலைவர் அஃபிப் பஹருதின் கேட்டுக்கொண்டுள்ளார். அக்கட்சி இளைஞர் அணி கட்சி நடைமுறைகளை புறக்கணிப்பதன்வழி கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கும் இடையிலான பூசலை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, உட்பூசலால் பிளவுபட்டிருக்கும் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட இளைஞர் அணி "நடுவர் பணி" ஆற்றலாம் என்றும் டாக்டர் அஃபிப் பஹருதின் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், சரவாக் கெஅடிலான் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல் சரவாக் தேர்தலில் கெஅடிலான் வெற்றி பெறும் வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கூறியுள்ளார். சரவாக்கில் சென்ற வாரம் நடந்த மாநாட்டைத் தொடர்ந்து கெஅடிலான் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.