சோல்: தென்கொரிய எல்லைத் தீவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன் பின்னரே அப்படகு அங்கிருந்து சென்றதாக தென்கொரிய ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோசமான பருவநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக அந்த வடகொரியப் படகு மேற்கு கடலோரப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகத் தெரியவந்துள்ளது என்றும் தென்கொரிய ராணுவம் கூறியது. தென்கொரிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றது முதல் இரண்டாவது தடவையாக வடகொரியாவைச் சேர்ந்த படகு மீது தென்கொரிய ராணுவம் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியிருப்பதாகத் தெரிகிறது.
தென்கொரியா: வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு
1 mins read

