பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை சரிந்துவிழுந்ததால் நால்வர் உயிரிழந்ததாகவும் எட்டுப் பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். யூனான் மாநிலத்தில் உள்ள சுரங்கப் பாதையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் சுமார் 13 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கப்பாதை சுவர் சரிந்து விழுந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இடுபாடுகளிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
சீனாவில் கட்டுமான சுரங்கப் பாதை சரிந்துவிழுந்ததில் நால்வர் மரணம்
1 mins read

