830 கிராம் குறைமாதக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து தேற்றிய மருத்துவர்கள்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் 830 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு தொடர் சிகிச்சை அளித்துவந்த ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இப்போது அக்குழந்தையின் எடையை 1,250 கிராமாக அதிக ரிக்கச் செய்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

81 நாட்களாக அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்ப தால் பெற்றோர் பெரும் மனநிம்மதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாளம் மலைகிராமத்தைச் சேர்ந்த வர் பசப்பா, 33. விவசாயி. இவரது மனைவி மாதேவி, 30.

இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெ னவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் மாதேவிக்கு செப்டம்பர் 5ல் ஏழாவது மாதத்தில் வீட்டிலேயே குறைமாதக் குழந்தை பிறந்தது.

குழந்தை 830 கிராம் எடையுடன் இருந்ததால் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

தாய்ப்பால் குடிக்கமுடியாமல் சோர்வாக இருந்த குழந்தையைக் காப்பாற்றுவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

தலைமை மருத்துவர் பூபதி, மருத்துவர் சக்திவேல் அடங்கிய மருத்துவக் குழுவினர் அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு இருமுறை ரத்தம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 81 நாட்கள் மருத்து வர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தை 1,160 கிலோவிற்கு எடை அதிகரித்தது.

இதையடுத்து குழந்தை தாய்ப்பால் குடிக்கத் துவங்கியதை அடுத்து பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதனால் குழந்தையை பெற்றோருடன் மருத்துவர் கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!