துபாய்: 3 டிரக்குகள் தீப்பற்றியதில் இந்திய ஓட்டுநர் கருகி உயிரிழப்பு

துபாய்: 3 டிரக்குகள் தீப்பற்றியதில் இந்திய ஓட்டுநர் கருகி உயிரிழப்பு

1 mins read
15c5e081-0e2d-4f0a-9101-3ac51c5b224b
ஒரு லாரியில் இருந்த ஓட்டுநர்  தப்ப முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். படங்கள்: ஊடகம் -

துபாயிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம் அல் குவைன் எனும் இடத்தில் எமிரேட்ஸ் சாலையில் மூன்று டிரக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இந்திய ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை வேளையில் நிகழ்ந்த விபத்தில் ஓட்டுநர்கள் வாகனங்களில் இருந்தபோதே இரண்டு டிரக்குகள் தீப்பற்றி எரிந்தன.

ஒரு டிரக்கில் இருந்த ஓட்டுநர் தப்ப முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். அவருக்கு வயது 25.

அவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.

விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு டிரக்குகளின் ஓட்டுநர்களும் காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity