லாகூர்: பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சாபர்கி பகுதியில் ரிக்ஷா சைக்கிள் அருகே எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகி லுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்,” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அவ்வப் போது நாச செயல்கள் நடந்து வரும் நிலையில், இதில் பயங்கரவாத சதிச் செயல் உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.