மணிலா: பிலிப்பீன்சின் ஒடுக்குமுறை உயர் இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும் பெரும்பாலான ஏழைகள் உயிரிழந்ததாகவும் அந்நாட்டில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் போதைப்பொருள் சட்டவிரோத விநியோகத்தில் ஈடுபட்டவர்களின் உடல்கள் பள்ளத்தாக்குகளிலும் விரிகுடாக்களிலும் கொட்டப்பட்டுள்ளன என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே (படம்) கூறியுள்ளார்.
“இந்த முட்டாள் கட்டுரையாளர்கள் நாங்கள் போதைப்பொருள் பிரபுக்களைக் கொல்லவில்லை என்று கூறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“உங்களுக்குத் தெரியாது. மணிலா விரிகுடாவில் நான் எத்தனை உடல்களை எறிந்தேன் என்பது உங்களுக்குத் தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பிலிப்பீன்ஸ் போலிசின் புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 5,779 சந்தேகப் பேர்வழிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கான கடைசி நிமிட கட்டுமானம், தளவாட சிக்கல்கள், குழப்பங்கள் குறித்து விசாரணை நடத்தவும் டுட்டர்டே நேற்று உத்தரவிட்டுள்ளார்.