கிங்ஸ்டன்: கனடாவில் கிங்ஸ்டன் அருகே அமெரிக்க எல்லைப் பகுதியில் சிறிய ரக அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் அமெரிக்கர்கள். 2 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சிறிய ரக விமானம் மர்கம் விமான நிலையத்திலிருந்து கியூபெக் நகரத்திற்கு செல்லும்போது விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் காற்று பலமாக வீசியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஓட்டுநரின் தவற்றால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.