லண்டன் பதற்றம் அடங்கும் முன்னரே நெதர்லாந்திலும் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்ந்தது. அங்குள்ள ‘த ஹேக்’ நகரில் வெள்ளிக்கிழமை இரவில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடைத்தொகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் வயது குறைந்த மூன்று பேர் காயமுற்றதாகவும் போலிசார் கூறினர்.
‘கறுப்பு வெள்ளி’ என்பதால் பொருட்களை வாங்க அந்தக் கடைத்தொகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைப் பயன்படுத்தி ஊடுருவிய ஆடவர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். தப்பிச் சென்ற அவரைத் தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டு உள்ளனர். அவரது இருப்பிடம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக த ஹேக் நகர போலிசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். காயமுற்றவர்கள் சிறுவர்கள் என்று கூறிய போலிசார், அவர்களின் வயதைத் தெரிவிக்கவில்லை.
‘ஹட்சன்’ஸ் பே’ கடைத்தொகுதியில் கத்திக்குத்து நிகழ்ந்ததும் கூட்டத்தினர் பதறியடித்து ஓடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.