மகாதீர்: அடுத்த பொதுத்தேர்தலில் ஹரப்பானின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிக்கலாம்

கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்து வரும் 15வது பொதுத் தேர்தலில் ஹரப்பானின் எதிர்காலத்தை நிர்ணயிக்கலாம் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

மலேசிய முஸ்லிம் சமூக நல அமைப்பின் 58வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் சாதனைகளை மதிப்பிட மக்கள் அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார். ஆய்வு மையம் ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பெரும்பகுதியினர் ஹரப்பான் கூட்டணி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் நாட்டின் எதிர்காலம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்பது தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தனர்.

மக்களின் அந்தக் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் மகாதீர் இவ்வாறு பதில் அளித்தார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் நிறைவேற்ற ஐந்தாண்டுகள் ஆகும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

“அதற்குப் பிறகும் மக்களுக்கு நம்பிக்கை வராவிட்டால் 15வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்.

“நாங்கள் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். அவற்றை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் ஆகும்”, என்று டாக்டர் மகாதீர் சொன்னார். “தேர்தல் அறிக்கை தயாரித்த நேரத்தில் எங்களுக்கு முழுமையான விவரம் தெரியாது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகுதான் தெரியவந்தது. முந்தைய அரசாங்கம் அவ்வளவு மோசமான நிலையில் நாட்டை வைத்திருந்ததன் காரணமாக எங்கள் இலக்குகளை அடைவது சிரமமாக உள்ளது,” என மகாதீர் குறிப்பிட்டார்.

பிரதமர் பொறுப்பை டாக்டர் மகாதீர் கெஅடிலான் கட்சித் தலைவரிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்ற நெருக்குதல் ஹரப்பான் கூட்டணிக்குள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய அரசாங்கம் அதன் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் நிலவுவதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!