பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அப்துல் மஹதி அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாக்தாத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராக்கில் ஊழல் அதிகரிப்பு, நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் இந்தக் காரணங்களால் அதிருப்தி அடைந்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கடந்த அக் டோபர் மாதம் முதல் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானோர் பலியானதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈராக்கில் நீடிக்கும் கலவரங்கள் குறித்து ஐநா. தலைமைச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து ஈராக்கிய பிரதமர் அப்துல் மஹதி விலகு வதாக தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை அப்துல் மஹதி பதவி விலகல் கடிதத்தை நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சென்ற ஆண்டு மே மாதம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.