கென்யாவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையைத் தொடர்ந்து அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச் சரிவும் ஏற்பட்டன. வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கிய நிலையில் வீடுகளில் இருந்த பொருட்கள் எல்லாம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளை இழந்த பலர் பள்ளிகளிலும் தற்காலிக முகாம்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். “வெள்ளத்தில் அனைத்தையும் இழந்துவிட்டோம். இங்கு வாழவே விரும்பவில்லை,” என்று ஒருவர் கூறியுள்ளார்.
படம்: ஏஎஃப்பி