கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை செய்து வரும் வேளையில், வெள்ள நிவாரண நிலையங்களில் தஞ்சம் அடைந்திருக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை இரட்டிப்பாகி 2,611ஐ எட்டியுள்ளது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மலேசியாவின் கிழக்குக் கரையோர மாநிலங்களில் பொதுவாக ஆண்டிறுதி மழைக்காலங்களின்போது தொடர்ந்து கனமழை பெய்வதால், அங்குள்ள ஆறுகள் பொங்கி வழியும்.
அண்மைய ஆண்டுகளில் என்று பார்த்தால், 2014 டிசம்பர் மாதத்துக்கும் 2015 ஜனவரி மாதத்துக்கும் இடையே 200,000க்கு மேற் பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெள்ள நிவாரண நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். அதில் 24 பேர் மரணமடைந்தனர்.
அப்போது பெய்த தொடர் கன மழை, சாபா, சரவாக், ஜோகூர், கெடா உட்பட மலேசியாவின் 13 மாநிலங்களில் 11ஐத் தாக்கியது.
திரங்கானுவில் நேற்று முன் தினம் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2,296 பேர் 40 வெள்ள நிவாரண நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கடந்த வெள் ளிக்கிழமை அந்த எண்ணிக்கை 875 ஆக மட்டும் இருந்தது.
கிளந்தானில் கடந்த வெள்ளிக் கிழமை வெள்ள நிவாரண நிலையங்களில் தஞ்சமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 315க்கு உயர்ந்தது.
இதற்கிடையே, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களை வெள்ள ஆபத்தான பகுதிகளாக மலேசிய வானிலை ஆய்வு நிலையம் அறி வித்திருக்கிறது.
கிளந்தானில் உள்ள தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, தானா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசிர் புத்தே ஆகிய பகுதிகளும் திரங் கானுவில் உள்ள பெசுட், செத்தியு ஆகிய பகுதிகளும் ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக் கின்றன.
இந்தப் பகுதிகளில் இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.