கோத்தா பாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் போலிஸ் அதிகாரி மீது காரை ஏற்ற முயன்ற 15 வயது சிறுவன் தோள்பட்டையில் சுடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலிசாரின் பிடியிலிருந்து சிறுவன் தப்பித்து காரை ஓட்டிச் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. கெடாய் லாலாட் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கிளந்தான் போலிஸ் தலைவர் ஹசனுதீன் ஹசான் தெரிவித்தார்.
ரோந்துக்காவல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அச்சிறுவன் ஓட்டிய காரை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.ஆனால் அவன் காரை நிறுத்தாமல் அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டான்.அதன் பிறகு காரை துரத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சிறுவன் தோள்பட்டையில் சுடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். காயமடைந்த அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவத்தின்போது காரில் ஒரு மாதும் 17 வயது ஆடவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்விருவரும் போலிசாரின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.