மியன்மார் ராணுவம் தாக்கியதில் பெண், இரு குழந்தைகள் மரணம்

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்ணும் ஒருவரும் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். மராவுக் யு நகரில் பாதுகாப்புப் படையினருக்கும் ரோஹிங்யா போராளிகளுக்குமிடையே நிகழ்ந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் குடியிருப்பாளர்களும்  நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த அந்தத் தாக்குதலில் உயிரிழந்த பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்றும் காயமடைந்தவர்களில் இரு கர்ப்பிணிகளும் அடங்குவர் என்றும் அந்நகரத்தின் எம்பி துன் அங் கியாவ் ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறினார். 

பெரும்பான்மை பௌத்த மதத்தினரைக் கொண்ட ராக்கைன் மாநிலத்திலிருந்து ஆள்சேர்க்கும் அராக்கன் போராளி அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னதாக கட்டவிழ்த்தது.

மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி கேட்டு போராளிகள் போராடுகின்றனர்.