தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவைத்த இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை ஒரு மாதக் காலத்துக்கு நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏதுவாக அவர் நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளதாக அறியப்படு கிறது. கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே, 70, கடந்த 18ஆம் தேதி அதிபராகப் பதவி ஏற்றார். புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்க இருந்த நிலையில், தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளார். தற்போது தனக்கு உள்ள ஆதரவு அலையைப் பயன்படுத்தி ஆறு மாதம் முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, நாடாளுமன்றத்திலும் தனது கையை வலுப்படுத்த அவர் முடிவுசெய்துள்ளார்.