இலங்கை: ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைக்க பொய் ஆவணங்கள்

இலங்கை: ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைக்க பொய் ஆவணங்கள்

1 mins read

கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அதற்காக பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் அதிபர் விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் இந்த சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள். புதிய அதிபரை முதன்முறையகச் சந்தித்த அவர்கள், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே அது தொடர்பிலான தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும் அதிகாரிகள் அதன் மீது கவனம் செலுத்தவில்லை என முறையிட்டனர்.