கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவால் 132 பேர் பலி

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவால் 132 பேர் பலி

1 mins read

நைரோபி: கென்யாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிலச்சரிவுகள் ஆகியவற்றில் சிக்கி 132 பேர் மாண்டுவிட்டனர். 17,000 பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் 11,000 கால்நடைகளை அடித்துச் சென்றுவிட்டதாக புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடர்களால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அது கூறியது.