ஹவாயி: அமெரிக்காவின் ஹவாயி தீவில் பெர்ல் ஹார்பர் ராணுவத் தளம் உள்ளது. நேற்று அந்த ராணுவத் தளத்திற்குள் அதிரடியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறின்ர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் அவர் அமெரிக்க கடற்படை வீரர் என்பது தெரியவந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
1 mins read

