மலேசியாவில் டெங்கி பாதிப்பு இந்த ஆண்டு அதிகரிப்பு

மலேசியாவில் டெங்கி பாதிப்பு இந்த ஆண்டு அதிகரிப்பு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் அதிகம் என்று புள்ளிவிவர கணக்கு காட்டுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 120,871 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் மொத்தம் 120,836 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 330 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டு இறுதியில் சுமார் 150,000 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடும் என்று சுகாதார துணை அமைச்சர் லீ பூன் சை கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார். டெங்கி காய்ச்சல் பற்றிய இணையப் பக்கத்தில் இந்த ஆண்டு டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. டெங்கி தொடர்பான பாதிப்புகளால் மலேசியாவில் இந்த ஆண்டு 164 பேர் மரணம் அடைந்ததாக புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது