பிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி

பாரிஸ்: பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து பிரான்சில் நேற்று முன்தினம் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

பல ஆண்டுகள் நிகழாத அளவுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மிக மோசமாக இருந்தது.

புதிய திட்டத்தை பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரன் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

முன்னாள் முதலீட்டு வங்கி அதிகாரியான 41 வயது மெக்ரன், பிரான்சின் பொருளியலைத்

திறந்துவிடப்போவதாகக் கூறி 2017ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தார். இது ஊழியர்களின் நலனுக்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், 64 வயதுக்கு முன்பு ஓய்வூதியம் கோருபவர்களுக்கு குறைந்த சலுகை கிடைக்கும் என்று தெரிவித்ததை அடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் தலைநகர் பாரிசில் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கூடி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோது முகக்கவசம் அணிந்த சிலர் பேருந்து நிறுத்தம் ஒன்றைச் சேதப்படுத்தினர். தெருக்களில் வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலிகளை உடைத்தும் கடைகளின் கண்ணாடிச் சன்னல்களை உடைத்தும் போலிசாரை நோக்கி வெடிகளை வீசியும் அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பிரெஞ்சு போலிசார் அவர்களை நோக்கி கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

விரைந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போலிசார் தடியடி நடத்தினர்.

பிரான்சின் ஓய்வூதியத் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. வெவ்வேறு ஓய்வுபெறும் வயது, சலுகைகள் உள்ளன. இந்த அணுகுமுறை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!