கேரி லாமிற்கு கடைசி வாய்ப்பு: போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

கேரி லாமிற்கு கடைசி வாய்ப்பு: போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

1 mins read
Google News Preferred Icon

ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசாங்கத்தை எதிர்த்து இந்த வாரயிறுதியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக போராட்டத்தின் தீவிரம் குறைந்திருப்பதால் பொதுமக்களின் கொந்தளிப்பு குறைந்திருப்பதாக எண்ணிவிட வேண்டாம் என்று ஹாங்காங் தலைவர் கேரி லாமிற்கு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் மக்களுக்குக் கூடுதல் ஜனநாயகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் போலிசாரின் செயல்பாடுகள் கூர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

இந்த வாரயிறுதிப் போராட்டம் கேரி லாமிற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஜனநாயக ஆதரவு அரசியல்வாதிகள் அபார வெற்றி பெற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படாது என்று திருவாட்டி லாம் தெரிவித்தார். இது ஹாங்காங் மக்களை மேலும் கோபப்படுத்தி உள்ளது.