கோர்பின்: தகவல் கசிந்ததால் பிரதமர் ஜான்சனின் மோசடியை அம்பலம்

கோர்பின்: தகவல் கசிந்ததால் பிரதமர் ஜான்சனின் மோசடியை அம்பலம்

1 mins read
Google News Preferred Icon

லண்டன்: ரகசிய அரசு ஆவணம் தமது கைகளுக்கு வந்துள்ளதாகவும் அது பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார்.

பிரதமர் ஜான்சன் முன்வைத்துள்ள பிரெக்சிட் பரிந்துரையின்படி பிரிட்டனுக்கும் வடஅயர்லாந்துக்கும் இடையே சோதனைச்சாவடிகள் இருக்கும் என ரகசிய ஆவணம் குறிப்பிடுவதாக திரு கோர்பின் தெரிவித்தார். அயர்லாந்துக் கடற்பகுதிகளில் பிரிட்டனுடன் எந்த ஓர் எல்லையும் இருக்காது என்று பிரதமர் ஜான்சன் உறுதி அளித்திருந்ததைத் திரு கோர்பின் சுட்டினார். ஆனால் பிரதமர் ஜான்சன் முன்பு கூறியதற்கும் தற்போது நடந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக திரு கோர்பின் குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சுங்கத்

துறையை அமைப்பது போன்ற புதிய பரிசீலனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டனின் தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு அதுதொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த அது திட்டமிட்டுள்ளது.