சீனாவில் ஆலை வெடிப்பு: 7 பேர் பலி, பலர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வெடி பொருள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் கடந்த புதன்கிழமையன்று வெடிப்பு நிகழ்ந்ததில் ஏழு பேர் மாண்டதாக  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பின் காரணமாக 13 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத வெடி

பொருட்கள் தயாரிக்கப்பட்டதால் வெடிப்பு ஏற்பட்டதாக லியூயாங் நகரத்தின் அதிகாரிகள் கூறினர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கும் சீனப் புத்தாண்டுக்காக இந்த வெடி

பொருட்கள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆலையின் நிர்வாகிகளை போலிசார் தடுத்து வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அனைத்து வெடிபொருள் தயாரிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.