சவூதி அரேபிய உணவகங்களில் இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நுழைவாயில்களை அமைக்கத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுநாள் வரை, ஆண்களுக்குத் தனி வழி, பெண்கள், குடும்பத்தினருக்கு இன்னொரு வழி என இரு நுழைவாயில்களை வைக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், தனித்தனி நுழைவாயில்கள் அமைப்பது கட்டாயமில்லை என்றும் அதுபற்றி உணவகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதை இந்தப் புதிய அறிவிப்பு காட்டுகிறது. ஆண் காப்பாளர் ஒருவரின் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு செல்லலாம் என இவ்வாண்டில் முன்னதாக சவூதி அரசு அறிவித்திருந்தது. அதுபோல, பெண்கள் காரோட்ட விதிக்கப்பட்ட தடையும் கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.