நோம்பென்: கம்போடிய பிரதமர் ஹுன் சென்னுடன் நெருங்கிய தொடர்புகொண்ட தொழிலதிபர் ஒருவர் மீதும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் மீதும் அமெரிக்கா பொருளியல் தடை விதித்துள்ளது. கம்போடிய ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் குன் கிம், ஆளும் கட்சி உறுப்பினராக இருக்கும் தொழில் அதிபர் ட்ரை பீஃப் ஆகியோரே அந்த இருவர்.
எதிர்க்கட்சிகள் மீதான ஹுன் சென்னின் ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதோடு, சீனாவுடனான கம்போடியாவின் ராணுவ உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்திருப்பதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், திரு ட்ரை பீஃப்பின் 11 நிறுவனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பொருளியல் தடைகள் பயனற்றவை என ஆளும் கட்சியின் பேச்சாளரும் செனட்டருமான சோக் ஐசன் கருத்துரைத்துள்ளார்.