சலவை இயந்திரம், அறைகலனில் ஆள் கடத்தல்

சலவை இயந்திரம், அறைகலனில் ஆள் கடத்தல்

1 mins read
ec261a17-b3a8-4501-a096-b4cc914325cc
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், சலவை இயந்திரம் மற்றும் அறைகலன்களில் பதுங்கி அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்த சீனாவைச் சேர்ந்த 11 சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்துள்ளனர். படங்கள்: CBP -
multi-img1 of 3

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், சலவை இயந்திரம் மற்றும் அறைகலன்களில் பதுங்கி அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்த சீனாவைச் சேர்ந்த 11 சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவிலிருந்து மூடப்பட்ட டிரக் வாகனத்தில் சீனாவைச் சேர்ந்த 11 பேர் பதுங்கியிருந்தனர்.

டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சான் டியகோ நகரில் சான் சிட்ரோ எல்லையில் அந்த டிரக்கை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சலவை இயந்திரத்தில் சிலர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

யாருக்கும் காயமில்லை என்று சான் டியகோவுக்கான சுங்கத் துறை, எல்லைப் பாதுகாப்பு இயக்குநர் பீட் புளோரஸ் தெரிவித்தார்.

டிரக்கை ஓட்டி வந்த 42 வயது அமெரிக்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்