சுடச் சுடச் செய்திகள்

கடலில் மிதக்கும் விமானத்தின் பாகங்கள்

சான்டியகோ: சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதை சிலி நாட்டின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 38 பேருடன் பறந்த சி-130 சரக்கு விமானம் காணாமல் போனது.

இந்த நிலையில் ‘டிராகே பாசேஜ்’ எனும் கடற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அது, காணாமல்போன விமானத்தின் பாகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விமானப் படை கமாண்டர் இட்வார்டோ மோஸ்கியூரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டு காணாமல்போன விமானத்தைச் சேர்ந்ததா என்பது உறுதி செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

சிலியின் புன்டா ஏரினாசிலிருந்து புறப்பட்ட சி-130 விமானம் சிறிது நேரத்தில் காணாமல்போனது.