சுடச் சுடச் செய்திகள்

எரிமலை: சடலங்களை மீட்கும் பணி தொடக்கம்

வெலிங்டன்: நியூசிலாந்தின் ‘ஒயிட் ஐலண்ட்’ எரிமலை வெடிப்பில் கொல்லப்பட்ட எட்டுப் பேரின் உடல்களை மீட்கும் பணி இன்று தொடங்கும் என்று நியூசிலாந்து போலிசார் அறிவித்துள்ளனர்.

அடுத்த வெடிப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்.

கடந்த திங்கட்கிழமை காலை எரிமலை திடீரென வெடித்தபோது தீவில் இருந்த எட்டு சுற்றுப் பயணிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் அதிவேகத்தில் சடலங்களை மீட்பது குறித்து நியூசிலாந்து போலிசார் திட்டமிட்டு வருகின்றனர். எரிமலை வெடிப்பில் ஏற்கெனவே இதர எட்டு பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த இருபது பேர் இன்னமும் அவசர சிகிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நியூசிலாந்தின் புவியியல் ஆய்வு நிலையமான ‘ஜியோநெட்’ அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் எரிமலை வெடிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்று எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது. இது, மற்றொரு வெடிப்பு ஏற்படலாம் என்பதற்கான அடையாளம் என்று  ஜியோநெட் கூறியது.

ஆபத்தான சூழ்நிலையில்  மீட்புப் பணிகளை மேற்கொள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளை பரி சீலித்து வருகிறோம் என்று செய்தி யாளர்களிடம் பேசிய துணை போலிஸ் ஆணையர்  மைக் கிளமெண்ட் கூறியுள்ளார்.