மகனை பிச்சை எடுக்க வைத்த தந்தை

மகனை பிச்சை எடுக்க வைத்த தந்தை

1 mins read
Google News Preferred Icon

ஷங்காய்: ஷங்காய் ரயில் நிலையத்தில் அதிகாலையில் கடுங்குளிரில் பள்ளிப் பையை சுமந்து கொண்டு மண்டியிட்ட நிலையில் தட்டை ஏந்தி உணவுக்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனை போலிசார் மீட்டுள்ளனர். சிறுவன் வீட்டுப் பாடங்களை முடிக்காததால் சிறுவனின் தந்தை அவனுக்கு இந்தத் தண்டனையை நேற்று முன்தினம் விதித்ததாக Kankannews.com செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது. காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சூடான பானம், பிஸ்கட் போன்ற வற்றைச் சிறுவனுக்கு அளித்த போலிசார் அவனது தாயாருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தாயாருக்கு போலிசார் அறிவுரை வழங்கினார். சிறுவன் படிப்பில் அக்கறை காட்டாததால் கணவர் வருத்தம் அைடந்ததாகவும் இருப்பினும் கணவரின் செயலில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தாயார் கூறினார்.