சான்டியாகோ: அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், சலவை இயந்திரம் மற்றும் அறைகலன்களில் பதுங்கி அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்துள்ளனர். மெக்சிகோவிலிருந்து மூடப்பட்ட டிரக் வாகனத்தில் சீனாவைச் சேர்ந்த 11 பேர் பதுங்கி யிருந்தனர். டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சான் டியாகோ நகரில் சான் சிட்ரோ எல்லையில் அந்த டிரக்கை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலவை இயந்திரத்தில் சிலர் பதுங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று சான்டியகோவுக்கான சுங்கத் துறை, எல்லைப் பாதுகாப்பு இயக்குநர் பீட் புளோரஸ் தெரிவித்தார். டிரக்கை ஓட்டி வந்த 42 வயது அமெரிக்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சலவை இயந்திரத்தில் ஆள் கடத்தல்
1 mins read

