ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

1 mins read
7b391c6f-550a-4e46-aedd-38f52c775fee
உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம் -

அமெரிக்க நிறுவனம் ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது 200 ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கிறிஸ்துமஸ் போனசாக வழங்கி அசத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள 'செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ்' எனும் தனியார் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பங்கேற்ற சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊழியர்களின் மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவரான 81 வயது திரு எட்வர்டு செயிண்ட் ஜான் உரையாற்றினார்.

அப்போது அவர் ஊழியர்களிடம் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிவப்பு நிற உறைகளை பிரித்துப் பார்க்கச் சொன்னார்.

அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஊழியருக்கும் அவரது வேலை அனுபவத்தின் அடிப்படையில் போனஸ் தொகை அளிக்கப்பட்டிருந்தது.

இதில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டு இன்னும் பணியையே தொடங்காத ஊழியருக்குக்கூட 100 அமெரிக்க டாலர்கள் போனஸ் தொகையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

அதிகபட்ச போனஸ் தொகையாக 2,70,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்