இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், தாம் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறியுள்ளார்.

இவர் 400க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களை நடத்தும் வெற்றிகரமான தொழிலதிபர். 

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

மும்பை-புனே இடையே அதிநவீன ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பிரான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எனது எள்ளுப்பாட்டியின் தாயின் பெயர் ஆரியா. அவர் கடலூரைச் சேர்ந்தவர். எனவே நான் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மரபணு தமிழகத்தோடு தொடர்புடையது என அறிவியல் ரீதியான சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity